பீஹாரில் பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2015ல் பீஹாரிலும், 2017 ல் பஞ்சாபிலும் வெற்றி பெற்றோம். 2019ல் ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டியும் வெற்றி பெற்றார். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றோம். கடந்த 11 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் மட்டுமே தோல்வி கிடைத்துள்ளது. கடந்த 2017 ல் உ.பி.,யில் மட்டும் தான் தோல்வியடைந்தோம்.
இதனால், காங்கிரசில் ஒரு போதும் சேர மாட்டேன் என முடிவு செய்தேன் என கையெடுத்து கும்பிட்டபடி கூறிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் ஒரு போதும் செயல்படாத கட்சி. தற்போதைய தலைவர்கள், இறங்கி அனைவரையும் கூட்டி செல்வார்கள். அப்படி சென்றால், நானும் மூழ்கி விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்