தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான காலி இடம் ஏற்பட்டதை அடுத்து திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைத்தது. திமுகவின் மூன்று வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒரு எம்பி பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என கடந்த சில நாட்களாக ஆலோசனை நடந்து வந்த நிலையில் தற்போது ப சிதம்பரம் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாஅர். இதனை அடுத்து அவர் கூறியபோது, தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.