ஹைதராபாத்தில் உள்ள கொம்மு கூடம் பகுதியில் வசித்து வந்தவர் லஷ்மன். இவரது மனைவி சுஜன்யா. இவர்கள் இருவருக்கும் 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், கள்ளக்காதலியின் வீட்டுக்குச் சென்று கணவனையும் - கள்ளக்காதலியையும் பிடித்து அடித்து போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த சுஜன்யா, லஷ்மன் வீட்டுக்கு வரவில்லை என்ற காரணத்தால், விவாகரத்து கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.ஆனால் லஷ்மன் எதுவும் செய்யாமல் அமைதியாய் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஒரு முடிவுக்கு வந்து கோபம் அடைந்த சுஜன்யா இன்று அதிகாலை அனுஷாவின் வீட்டிற்குச் சென்று கணவனையும்,அப்பெண்ணையும் அடித்து தாக்கி இருவரையும் கூக்கட்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாகத் தகவல்கள் வெளியாகிறது.