2002ம் ஆண்டில் குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதை தொடர்ந்த படுகொலை சம்பவங்களும் நாட்டை ஸ்தம்பிக்க செய்வதாக அமைந்தன. இந்த சம்பவத்தின்போது பஞ்சமஹால் மாவட்டம் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் 2 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 22 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.