ரா அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது: அமெரிக்காவிடம் ஒப்படைப்பா?

Mahendran

சனி, 19 அக்டோபர் 2024 (08:56 IST)
இந்தியாவின் முன்னாள் ரா அதிகாரி, அமெரிக்காவின் தேடப்படும் குற்றவாளி மற்றும் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன் என்பவரை கொலை செய்த கொலையாளி எனக் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் விகாஷ் யாதவ் டெல்லியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே, அவர் மீது அமெரிக்காவின் FBI விசாரணை செய்து வரும் நிலையில், அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
அமெரிக்க அரசு, விகாஷ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, கூலிக்கு கொலை செய்தல், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தது.
 
இந்நிலையில், டெல்லியில் சிறப்பு தனிப்படையா போலீசாரால் விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்படுவாரா அல்லது இந்திய அரசே அவர் மீது விசாரணை நடத்துமா என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்