ரயில்களில் மீண்டும் உணவு விநியோகம்… இன்று முதல் ஆரம்பம்!

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:08 IST)
கொரோனா வைரஸ் காரணமாக ரயில்களில் உணவி விநியோகிப்பது நிறுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஐஆர்சிடிசி ரயில்களில் உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒருசில ரயில் நிலையங்களில் மட்டும் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ஐஆர்சிடிசிக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்று முதல் மீண்டும் ரயில்களில் உணவு விநியோகம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 60 நகரங்களில் தொடங்கப்படும் இந்த சேவை இம்மாத இறுதிக்குள் 450 மையங்களில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்