பெண் மருத்துவரின் பெயர் புகைப்படம் நீக்கம்.! உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய விக்கிப்பீடியா.!!

Senthil Velan

புதன், 18 செப்டம்பர் 2024 (13:07 IST)
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று விக்கிபீடியா நீக்கியது.
 
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 
 
இச்சம்பவம் தொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது. இச்சம்பவத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

(செப்டம்பர் 17) நேற்றைய விசாரணையின் போது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர், புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று விக்கிப்பீடியா இணையத்தளத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்த உத்தரவை ஏற்று கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை விக்கிப்பீடியா நீக்கி உள்ளது. 


ALSO READ: மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.! பாஜகவினருக்கு திருமாவளவன் பதிலடி..!!


விக்கிப்பீடியா தளத்தில் உள்ள இந்தக் கட்டுரை இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.22-க்கு கடைசியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்