இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய பாஜக அரசை குறை கூறி வரும் நிலையில், இன்று காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட 10 முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளன.
இந்த நிலையில், மணிப்பூரில் மோதலை தூண்டும் வகையில் வதந்தி பரப்புவதை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 3 ஆம் தேதி அங்கு இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இம்மாதம் 25 ஆம் தேதி வரை இணையதளத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகரம் உத்தரவிட்டுள்ளது.