மும்பையைச் சேர்ந்த ராம்தாஸ் என்ற 72 வயது முதியவர் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் மனைவியும் இறந்ததால் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கவிதா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து, ஆத்திரமடைந்த ராம்தாஸ், தான் கொடுத்த தங்க நகைகளை திருப்பி கொடுக்கும்படி கூறிய நிலையில், கவிதா மற்றும் அவரது கணவர் அந்த முதியவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதனை அடுத்து, ராம்தாஸ் வீட்டிற்கு வந்த கவிதா, அவருக்கு மயக்க மருந்து கொடுத்தார். அதன் பின் தனது கணவருக்கு தகவல் கொடுத்த நிலையில், இருவரும் சேர்ந்து ராம்தாஸை அடித்தே கொலை செய்துள்ளனர்.
தனது தந்தையின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் அடைந்த வெளியூரில் இருந்த ராம்தாஸ் மகன் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, காவல்துறையினர் ராம்தாஸ் வீட்டுக்கு வந்த போது, அவர் இறந்து கிடந்தார்.
இதனை அடுத்து, அவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த பெண் தான் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்பட்ட நிலையில், அவரை கைது செய்து விசாரணை செய்தனர். அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.