மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் வெளியே நடைபெறும் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.
தீபிகாவின் இந்த செயலுக்கு வரவேற்புகளும் கண்டனங்களும் குவிந்துள்ளது. இன்னும் இரு தினகங்களில் வெளியாகும் சபாக் என்னும் தனது படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் இப்படி செய்துள்ளார் என விமர்சித்து #boycottchhapaak என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். தீபாவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் #IstandwithDeepika என்றும் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தீபிகா இது குறித்து மனதிறந்துள்ளார். அவர் கூறியதாவது, இது போன்று படத்திற்கு எதிராக குரல் கொடுப்பதை நான் பத்மாவத் வெளியீட்டின் போதே பார்த்துவிட்டேன். ஆனால், இது எனக்கு வலியை கொடுக்கிறது. நான் கலக்கத்திலும் சோகத்திலும் இருக்கிறேன்.