இந்நிலையில் நேற்று முன் தினம் 1,00,636 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இதுமேலும் குறையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அதில், அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும், தீபாவளி வரை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ரேசனில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்.