கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது குறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்த போது, புகார் அளித்த சிறுமி தாயாரின் இரண்டாவது கணவர் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை விதித்து பத்தினம்திட்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.