ஒரு கிறிஸ்தவர் எப்படி பிரார்த்தனை கூடத்தில் வெடிகுண்டு வைப்பார்: சிபி ராதாகிருஷ்ணன்

திங்கள், 30 அக்டோபர் 2023 (12:15 IST)
கேரள மாநிலத்தில் நேற்று நடந்த கிறிஸ்துவ கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாக நேற்று ஒருவர் சரணடைந்த நிலையில் அவர்தான் இந்த வெடிகுண்டை வைத்திருப்பார் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
ஒரு கிறிஸ்துவ சபை கூட்டத்தில் ஒரு கிறிஸ்துவரே எப்படி வெடிகுண்டு வைப்பார் என்ற கேள்விதான் எழுகிறது என்றும் அங்கு நடந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியாக இருக்கட்டும் தமிழகத்தில் நடந்து வரும் திமுக ஆட்சியாக இருக்கட்டும்  தீவிரவாதத்திற்கு துணை போவதாக இருக்கிறது என்றும் வாக்கு அரசியலுக்காக இவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு தருகின்றனர் என்றும் தெரிவித்தார் 
 
ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்