சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் செய்யலாம் என்றும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்குத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கான செயற்குழு வாரிய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதற்குள் இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், டிசம்பர் 3 ஆம் தேதி இத்தேர்தல் நடத்த ஒப்புதல் அளிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.