திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் இந்து மதத்தினரை தவிர, மாற்று மதத்தினரை விடுவிப்போம் என்றும், அவர்களுக்கான கட்டாய ஓய்வு அளிப்பது பற்றி விவாதிப்போம் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் வி. ஆர். நாயுடு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கட்டாய ஓய்வுக்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நகராட்சி அல்லது பிறர் துறைக்கு மாற்ற பரிந்துரை செய்வோம்" என்றும், திருமலையில் மாற்று மத பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "திருப்பதி மலையில் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது" என்றும், விதிகளை மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.