நடனமாடிய பெண் மீது பணமழை பொழிந்த காங்கிரஸ் தொண்டர்...பாஜக கண்டனம்

புதன், 8 மார்ச் 2023 (19:50 IST)
கர்நாடக மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் மீது பணமழை பொழிந்த காங்கிரஸ் தொண்டர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென பாஜக கூறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது..

இம்மாநிலத்தில் உள்ள தார்வாத் என்ற மாவட்டத்தில் நடைபெற்ற  திருமண நிகழ்ச்சி  ஒன்றில்  காங்கிரஸ் தொண்டர் ஹம்பன்னா கலந்துகொண்டார்.  திருமணத்தில் பெண் ஒருவர்  நடனம் ஆடியுள்ளார்.

இதைப்பார்த்த காங்கிரஸ் தொண்டரும் உற்சாகத்தில் அவருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். அப்போது, தன் கையில் வைத்திருந்த பணதத்தாள்களை எடுத்து அப்பெண்ணின் மீது வீசினார்.

ALSO READ: திருமணம் எப்போது? காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி தகவல்
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதைப் பார்த்த அம்மாநில பாஜக பொதுச்செயலாளார் மகேஷ் தெங்கிங்காய்,’ ஒரு பெண் நடனம் ஆடுகிறார். அவர் மீது பணத்தைப் பொழிகிறார்…பணத்தின் மதிப்பு தெரியவில்லை….காங்கிரஸின் கலாச்சாரம் இதன் மூலம் தெரியவருகிறது.  இதை நான் கண்டிக்கிறேன்…’என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்