குஜராத் மாநிலத்தில் பாஜக அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 12-ம் தேதி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்றும் இரண்டாம் வட்டமாக 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார். இந்த போராட்டங்களுக்காக போலீஸ் நிலையங்களில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.