சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர் போராட்டம்

சனி, 1 ஏப்ரல் 2023 (16:33 IST)
தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி  இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், இதில், 15 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 14  சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டண  உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

தற்போது, சுங்கக்கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்திலுள்ள மணல் லாரி, டேங்கர் லாரி மற்றும் சரக்குப் போக்குவரத்து லாரி உள்ளிட்ட அனைத்து லாரி சங்கத்தினரும் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சுங்கச்சாவடி கண்ட உயர்வை திரும்ப பெறவேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்