சூடுபிடிக்கும் பெகாசஸ் உளவு விவகாரம்; மாநிலங்களவையில் இன்று விளக்க அறிக்கை!

செவ்வாய், 20 ஜூலை 2021 (11:53 IST)
பெகாசஸ் உளவு விவகாரம் இந்திய பாராளுமன்றத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று அதுகுறித்த விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் வழியாக மத்திய அரசு 300க்கும் அதிகமானோர் செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியால் தொடர்ந்து இன்று வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று மக்களவையில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “மத்திய அரசு உளவு பார்த்ததாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை. பெகாசஸ் விவகாரத்தில் வெளியிடப்பட்ட நாடுகளின் பெயரில் உண்மையில்லை என அந்நிறுவனமே கூறியுள்ளது” என கூறியிருந்தார்.

ஆனாலும் தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளி தொடர்ந்து வரும் நிலையில் பெகாசஸ் திட்டம் பிரச்சினை தொடர்பான விளக்க அறிக்கையை இன்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்