தேசதுரோக சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறதா? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

திங்கள், 31 அக்டோபர் 2022 (20:11 IST)
தேசத்துரோக சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
தேசத்துரோக சட்டம் குறித்து மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் அதுவரை அந்த சட்டத்தின் நடைமுறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணன் உள்பட 3 பேர் அமர்வு தேசத்துரோக சட்டத்தின் கீழ் எந்த வழக்குகளை பதிவு செய்ய வேண்டாம் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது
 
இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ என்பது தேசத் துரோகச் சட்டம் என்று குறிப்பிடும் நிலையில் மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து விளக்கம் அளித்தது
 
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தேசத்துரோக சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்