ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: பீகார் முதல்வர் உறுதி!
புதன், 1 ஜூன் 2022 (21:38 IST)
பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்துள்ளார்.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளமும், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திய நிலயில் இதுகுறித்து ஆலோசனை செய்ய பீஹார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.