பேருந்து ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

செவ்வாய், 29 மார்ச் 2022 (17:16 IST)
பேருந்து ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
பேருந்துகளை அதற்கான பாதையில் ஓட்டாவிட்டால் பேருந்து ஓட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் பேருந்துகள் இயக்குவதற்கான பாதையில் ஓடாமல் பல்வேறு பாதையில் இயக்கப்படுவதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ளது
 
இந்த புகார்களை அடுத்து பேருந்துகளை சாலையில் பேருந்துகளுக்கு என ஒதுக்கப்பட்ட பாதையில் ஒட்டாத ஓட்டுனருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
மேலும் இரண்டாவது முறை தவறு செய்தால் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மூன்றாவது முறை தவறு செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்