கேரள வள்ளுவரையும் காவி மயமாக்கிய பாஜக: கடுப்பில் காங்கிரஸ்

திங்கள், 4 நவம்பர் 2019 (20:55 IST)
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் படத்திற்க்கு காவியுடை அணிவித்து திருநீறு பூசி அவரை இந்து என்பது போன்ர புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பாஜகவினர் பதிவு செய்ததற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றானர்.
 
திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு குரலைக் கூட அறியாதவர்கள் கூட திடீரென திருவள்ளுவரின் மீது பாசம் கொண்டு பாஜகவுக்கு எதிராக அறிக்கைகளையும் ஆவேசமாக டுவீட்டுக்களையும் வெளியிட்டு வருவது நகைப்புக்குரியதாக இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தில் திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்து வரும் பாஜக, தற்போது இதே பாணியை கேரளாவிலும் ஆரம்பித்துள்ளது. கேரளாவில் ஸ்ரீ நாராயண குரு என்பவர் தமிழகத்தின் வள்ளுவரை போலவே எந்த மதத்தையும் சாராமல் இறைப்பணியை செய்து வந்தவர். ஒரே ஜாதி ஒரே மதம் ஒரே இனம், ஒரே குலம் என்ற கொள்கையைப் பரப்பி வந்த ஸ்ரீ நாராயண குருவையும் தற்போது பாஜக இந்துவாக மாற்றிவிட்டது
 
ஸ்ரீ நாராயண குரு அவர்களுக்கும் ஹிந்து சாயம் பூசி அவருக்கும் காவி பெயிண்ட் அடித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றி பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பதிவால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கேரள காங்கிரஸார் பாஜகவினரின் இந்த பதிவை பார்த்து கடுப்பாகி உள்ளனர். உடனடியாக இந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கேரளாவில் பாஜகவே இல்லாத நிலையை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர் 
 
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும்தான் பாஜகவினர் வாக்கு அரசியலில் பலவீனமாக இருப்பதால் இந்த இரு மாநிலங்களிலும் காவி பிரச்சினையை மையமாக வைத்து பாஜக பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்