தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது உண்மை இல்லையா? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்

புதன், 14 மே 2014 (17:33 IST)
நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டுமென பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தற்போது, தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது உண்மை இல்லையா? என கேள்வி எழுப்பி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
பீகார் மாநிலம் நவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கிரிராஜ் சிங். இவர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டுமென பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது உண்மை இல்லையா? நான் எந்த ஒரு சமூகத்தையும்  குறிபிட்ட விரும்பவில்லை. ஆனால், இந்து உண்மையில்லையா? என் பேசி  மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்,
 

வெப்துனியாவைப் படிக்கவும்