தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டசபையில் 224 பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற மே 12ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். மேலும், வேட்பு மனு தாக்கல் ஏப் 17ம் தேதி எனவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
காலை 11 மணியளவில் பேசத் தொடங்கிய அவர் 11.30 மணிக்கு பின்பே தேர்தல் தேதியை அறிவித்தார். ஆனால், சரியாக 11.08 மனியளவில், பாஜக ஐடி விங்கின் டிவிட்டர் பக்கத்தில் கர்நாடகாவின் தேர்தல் தேதியை அமித் மல்வியா என்பவர் அறிவித்தார்.
எனவே, தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்பே பாஜகவிற்கு எப்படி இந்த தகவல் தெரிந்தது? இதுதான் பாஜகவிற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள கள்ள உறவு என பலரும் சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்தனர். இந்த விவகாரம் பூதாகரம் ஆகியதைத் தொடர்ந்து, இந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.