இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியில் இணைந்துள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த் நிலையில், குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சமூக மக்கள் பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்தனர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ரூபாலா தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்ட பின்பும் அதனை மறுத்துள்ள ராஜ்புத் சமூக மக்கள் ராஜ்கோட் தொகுதிக்கு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.