22 வயதில் ஐ.பி.எஸ், 28 வயதில் ராஜினாமா செய்த பீகார் லேடி சிங்கம்.. என்ன காரணம்?

Siva

சனி, 10 ஆகஸ்ட் 2024 (11:06 IST)
22 வயதில் ஐபிஎஸ் பாஸ் செய்த பீகாரை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி 28 வயதில் தனது பணியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காம்யா மிர்ஸா என்பவர் 22 வயதில் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அவரது தந்தை தொழிலதிபராக இருந்தபோதிலும் படிப்பில் கவனம் செலுத்தி அவர் முதல் முயற்சியிலேயே 172 இடத்தை பெற்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் அமைச்சரின் கொலை வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை அவர் கையாண்டு குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் என்பதால் அவர் பீகார் பெண் சிங்கம் என்று அம்மாநில மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் திடீரென 28 வயதில் அவர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை இன்னும் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் திறமையான அதிகாரிகளை அரசு இழக்க விரும்பவில்லை என்றும் அவரை அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
 
னால் தனது தந்தையின் தொழிலை தான் ஏற்று நடத்த இருப்பதாகவும் குடும்பத்தை கவனிக்க முடிவு செய்திருப்பதாகவும் அதனால் தான் அவர் ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பீகார் அரசு அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவரை மீண்டும் பணியில் சேரும்படி அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்