ED விசாரணைக்கு ஆஜராக அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு..!!

புதன், 3 ஜனவரி 2024 (11:26 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
 
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. 
 
இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநரிடம் அப்போதைய தலைமைச் செயலர் அறிக்கை அளித்தார். துணைநிலை ஆளுநரின் பரிந்துரைப்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

ALSO READ: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!
 
புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளன.
 
இந்த ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.  மூன்றாவது முறையாக இன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக இயலவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பி உள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய சதி நடப்பதாகவும்,  2024 மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாகவும்  ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்