சமீபத்தில் தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம் என காட்டமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிலளித்தனர்.