டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெல்லியில் பெண்களுக்கு பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்தினார். மெட்ரோ ரயிலில் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால் தற்போது பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மக்களை கவர வேண்டும் என்பதற்காக கெஜ்ரிவால் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இது 2015ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் என கெஜ்ரிவால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.