மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான குழு 14-ம் தேதி கூடி, ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்தது.
முன்னதாக தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட உயர்மட்டக்குழு தேர்வு செய்யும். ஆனால் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த சட்டப்படி, இந்த குழுவில் பிரதமர், மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை உறுப்பினராக நியமித்தது மத்திய அரசு .