பள்ளத்தாக்கில் தவறி விழுந்த 17 வயது சிறுவன்: உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

புதன், 16 நவம்பர் 2022 (17:47 IST)
பள்ளத்தாக்கில் தவறி விழுந்த 17 வயது சிறுவன்: உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!
பள்ளத்தாக்கில் தவறி விழுந்த 17 வயது சிறுவனை அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் காப்பாற்றி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவர் பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார். இந்த நிலையில் பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்ததில் அவரது இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் பள்ளத்தாக்கில் இருந்து மீண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
 
இதனையடுத்து அவர் தான் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் மீட்பு படையினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர் 
 
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அன்றைய தினம் அவரிடம் ஆப்பிள் வாட்ச் மட்டும் அணியாமல் இருந்திருந்தால் அவருடைய நிலை குறித்து யாருக்கும் தெரிந்திருக்காது என்றும் அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்றும் அவரது உயிரை காப்பாற்றியது ஆப்பிள் வாட்ச் தான் என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்