ஒடிஸா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் இருந்து ஐதராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் என்ஜின் உடன் இணைக்கப்பட்டு இந்த இணைப்பு பெட்டிகளில் இணைப்பு கம்பிகள் திடீரென கழன்று விழுந்தது. இதனை அடுத்து எஞ்சின் தனியாகவும் பெட்டிகள் தனியாகவும் பிரிந்தது. எஞ்சினில் இருந்து பெட்டிகள் பிரிந்ததை அறியாத எஞ்சின் டிரைவர், எஞ்சினை மட்டும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டிச் சென்றுவிட்டார்
இதன்பின்னர் எஞ்சினில் இருந்து கழன்ற பெட்டிகள் நடுவழியில் தன்னந்தனியாக நின்றததை அறிந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயில்வே துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின் ரயில்வே துறை என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்து மீண்டும் எஞ்சின், பெட்டிகள் இருக்கும் இடத்திற்கு பின்னால் வரவழைக்கப்பட்டது. அதன்பின் ரயில்வே பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து எஞ்சினையும் பெட்டிகளையும் இணைத்தனர்