தெலுங்கு தேசம் கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, மின்சார விநியோகம் குறித்து பெருமையாக பேசினார். நந்தியாலா தொகுதியில் மின்சார விநியோகம் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது எழுந்து ஒரு நபர் தங்கள் பகுதியில் மின்சார விநியோகம் சீராக இல்லை என புகார் கூறினார். இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, நீ எந்த கட்சிக்காரன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸா? உன்னை இங்கே அனுப்பினது யார்? முதல்வராகிய என்னிடமே மக்கள் முன்னிலையில் கேள்வி கேட்கிறாயா? நீ குடிச்சிட்டு வந்திருக்கியா? என கேட்டுக்கொண்டே போனார் அவர்.