இந்த நிலையில் நேற்று மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், அதற்குப் பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதையும் அதற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதையும் சாடிய அமைச்சர் அமித்ஷா, ‘370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை செய்து முடித்திருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் ராகுல்காந்தியும், சரத்பவாரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்திய அமித்ஷா, பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,, ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால் அதற்கு பதிலாக எதிரிகள் 10 பேர் கொல்லப்படுவார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது அறிந்திருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.