விமானத்தில் தங்கம் வெள்ளி கடத்திக்கொண்டு செல்லும் மாபியாக்கள் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில் போலீஸாரிடம் அவ்ரகள் பிடிபடும் போதுதான் உண்மை என்னவென்று உலகத்துக்கு தெரியவருகிறது. சிலர் பணத்துக்காக திருடுகின்றனர். சிலர் வயிற்று பிழைப்புக்கு திருடுகின்றனர். சிலர் அதை பிழைப்பாகக் கொண்டு தன் வாழ்க்கை வீணடித்து குற்றவாளிகளாக ஜெயிலில் காலம் கழிக்கின்றனர்..
அதுபோல் ஒரு சம்பவம் தற்போது பீஹாரில் நடந்துள்ளது. அதாவது இந்த நபர் கடத்தியுள்ளது பணமோ , தங்கமோ அல்ல மாறாக எலும்புக்கூடுகள் ஆகும் . போதை மருத்துகள் பரவலாக விற்பனை செய்யப்படும் இடமாக வட மாநிலம் இருப்பதால் ரயில் நிலையங்களில் பலகட்ட சோதனைகள் நடைபெறுவது வழக்கம்.