மத்திய பிரதேசத்தில் ஒரு பழங்ககுடியின குடும்பத்திற்கு என நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன், குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதைச் சேர்ந்த பெண் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், 3 பேர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேர், ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் தீ வைத்து எரித்த்துள்ளனர்.
அப்பெண் வலியால் துடித்தடித்தபோது, அவர்கள் மூவரும் அதை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது 3 பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.