2023ஆம் ஆண்டின் நீட் நுழைவுத் தேர்வு தேதி எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (11:07 IST)
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் இந்த தேர்வை வரவேற்று உள்ளனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டின் நீட் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
2023 ஆம் ஆண்டின் நீட் தேர்வு  மே 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் ஜே.ஈ.ஈ. நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்