இந்தியாவில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் கூட அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்து இந்தியாவில் சாலை விபத்துகள் 2021 என்ற தலைப்பில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2021ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 4,12,432 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர்.