இந்த ஆண்டு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை தனியார் நிறுவனத்திற்கு முதல்வர் கொடுத்ததே இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களில் இதுவரை 19 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தெலுங்கானா அரசு, தோல்வி அடைந்த மாணவர்களின் விடைத்தாள்களை எந்தவித கட்டணமும் இன்றி மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் சந்திரசேகரராவ் கூறியபோது, 'தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்க்கையில் இன்னும் நிறைய உள்ளது. தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது. வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது. உங்களுக்காக இன்னும் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றது. உங்களுடைய தற்கொலை உங்கள் பெற்றோர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும். எனவே சிந்தித்து செயல்படுங்கள்' என்று கூறியுள்ளார்.