இதனை அடுத்து குழந்தையை தன்னுடைய குடும்பத்தினர் பார்த்தால் அனைவருக்கும் உண்மை தெரிந்துவிடும் என்பதால் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு ஒரு பெட்டியில் வைத்து பூட்டி உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாய்க்கு இந்த விஷயம் தெரிய வர அவர் அதிர்ச்சி அடைந்த உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்
மருத்துவமனையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு 15 வயது சிறுமி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரையும் தேடி வருகிறோம் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.