தெலங்கானாவில் கொரோனாவில் இருந்து 13 பேர் மீண்டுள்ளனர்...
திங்கள், 30 மார்ச் 2020 (23:54 IST)
கொரோனாவைரஸ்சீனாவில்இருந்துபல்வேறுஉலகநாடுகளுக்குபரவியுள்ளது. இந்தகொரோனாவைரஸால்உலகம்முழுவதும் 748066 பேர்பாதிப்பட்டுள்ளனர்.35388 பேர்உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1071 பேர்பாதிப்பட்டுள்ளனர். 29 பேர்பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வேலைகளுக்குச் செல்லாமல் வீடுகளில் தனித்து ஓய்வெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானாவில் 13 பேர் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.அதேசமயம் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது. இதையடுத்து கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தெலங்கானாவில் 61 ஆக உயர்ந்துள்ளது.