தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன
பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10 ஆகிய வகுப்பு மாணவர்கள் தேர்வு தேர்ச்சி செய்யப்படுவதாகவும் பிளஸ் டூ தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்