மேற்கு வங்கத்தில் வெள்ளம்.. மத்திய அரசு உதவி செய்யவில்லை: மம்தா குற்றச்சாட்டு..!

Mahendran

திங்கள், 30 செப்டம்பர் 2024 (10:17 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நிலையில், மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தும்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த பேரிடரை சமாளிக்க மாநில அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தள்ளி போய் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கூச், பெகர், ஜல்பைகுரி உள்ளிட்ட மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இன்னும் பாதிப்புகள் மோசமாக அடையக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த பேரிடரை சமாளிக்க மத்திய அரசு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. பலமுறை நினைவூட்டியும், மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினால், அவருடைய அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்கின்றனர் என்று கூறிய மம்தா பானர்ஜி, பாஜக தலைவர்கள் தேர்தலின் போது மட்டுமே மேற்கு வங்கத்துக்கு வருகை தருகின்றனர். ஆனால், மேற்கு வங்க மாநில மக்கள் ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கும் போது, கண்டுகொள்ளாமல் உள்ளனர் என விமர்சனம் செய்துள்ளார்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்