அருணாச்சல பிரதேசத்தில் யாரும் செல்லாத மலைச்சிகரம்: தலாய் லாமா பெயர் வைக்க சீனா எதிர்ப்பு..

Siva

திங்கள், 30 செப்டம்பர் 2024 (06:55 IST)
அருணாச்சலப் பிரதேசத்தில் இதுவரை யாரும் செல்லாத ஒரு மலைச்சிகரத்தில், ஒரு குழுவினர் சென்றனர். அந்த மலைச்சிகரத்தில் தலாய் லாமா என்று பெயர் வைக்கப்பட்டதாகவும், இதற்கு சீனாவின் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் குழுவினர், சாகச பயணம் மேற்கொண்டு இதுவரை யாரும் செல்லாத சுமார் 21,000 அடிக்கு உயரம் உள்ள மலை உச்சியை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த சிகரத்திற்கு தலாய்லாமா என்று பெயர் சூட்டினர். இதற்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் இதற்கு பெரும் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறைச் செயலாளர் கூறியதாவது, "அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்கு உரிய பகுதி. இந்த பகுதியில் உள்ள இடத்திற்கு இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம். இதுதான் சீனாவின் நிலைப்பாடு" என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா மற்றும் சீனா இடையே அருணாச்சலப் பிரதேசத்தை சுற்றிய எல்லைப் பிரச்சனை இருந்து வரும் நிலையில், இந்திய மலையற்ற குழுவினர் சூட்டிய பெயருக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்