இளையராஜா பயோபிக் போஸ்டரில் இதெல்லாம் தப்பா இருக்கே… ரசிகர்கள் கருத்து!

vinoth

வியாழன், 21 மார்ச் 2024 (14:50 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். கமல்ஹாசன் திரைக்கதை எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த பட அறிவிப்பு கோடிக்கணக்கான இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

அந்த போஸ்டரில் இளையராஜா சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனலில் வந்து நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை டீகோட் செய்துள்ள ரசிகர்கள் “தேனியில் இருந்து சென்னை வந்த இளையராஜா எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்குதானே வந்திருப்பார். இதில் ஏன் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நிற்பது போல வடிவமைத்துள்ளார்கள்” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் அந்த போஸ்டரில் மண் தரையில் மழை தண்ணீர் குண்டும் குழியுமான சாலையில் ஆங்காங்கே தேங்கி கிடப்பது போல உள்ளது. அதைக் குறிப்பிட்டு பலர் சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் அப்போதே தார் சாலை அமைக்கப்பட்டு விட்டது. இதில் மந்தரையாகக் காட்டியுள்ளனர் என டிகோட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்