பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

டொமினிக்கன் குடியரசில் மனித உரிமைகளுக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராடிய மீராபல் சகோதரிகள் மூவர், அந்நாட்டுச் சர்வாதிகாரி ரபேல்ட்ரூஜிலோவினால் 1960 நவம்பர் 25ல் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, போர்கள், கலவரங்கள், மோதல்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் பிற வடிவங்களினால் வன்முறைக் கொடுமைகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் ஆளாகி வருகின்றனர்.

உலகில் மூன்றில் ஒரு பெண், அவளின் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறாள். இவற்றைத் தடுத்து நிறுத்த உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய நாள் இன்று.

வெப்துனியாவைப் படிக்கவும்