கூந்தலை பராமரிப்பதற்கென்ற அழகு நிலையங்கள் உள்ளன. முடிந்தால், அவ்வப்போது அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பைக் கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில் பராமரிக்கலாம்.
சீயக்காய் அரைக்கும்போது வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில், இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி பளபளப்பாக இருக்கும்.