மருந்து சாப்பிடும்போது பழ‌ச்சாறு வேண்டாம்!

செவ்வாய், 17 மார்ச் 2009 (11:36 IST)
பொதுவாக உட‌ல்நல‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு பழ‌ங்களு‌ம், பழ‌‌ச்சாறு‌ம் அ‌ளி‌ப்பது வழ‌க்க‌ம்.

ஆனால், சமீபத்தில் இங்கிலா‌ந்‌தி‌ல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி இந்த பழரசம் விஷயத்தில் நம்மை வேறு விதமாக எச்சரிக்கிறது.

உடல்நலக்குறைபாடுக்கு மருந்து உட்கொள்ளும்போது பழச்சாறு சாப்பிடக்
கூடாது; குறிப்பாக, திராட்சை சாறு குடிக்கக்கூடாது என்கிறது அந்த ஆய்வு அறிக்கை.

அதாவது, நுரையீரல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உடலில் உள்ள குழ‌ப்பை குறைப்பதற்காக மருந்து எடுத்துக்கொள்பவர்கள், அந்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்திலேயே பழச்சாறு குடித்தால் அவர்களது ரத்த அழுத்தம் அதிகரிப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள், அவர்கள் அதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துடன், திராட்சை உள்ளிட்ட பழச்சாற்றை உட்கொள்ளும்போது, அவர்கள் எடுக்கும் சிகிச்சைக்கு எதிரான விளைவுகள் ஏற்படுவது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதனால், மருந்து உட்கொள்பவர்கள், பழச்சாறு அரு‌ந்த வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்