திங்கள், 29 ஜூன் 2009 (12:27 IST)
தக்காளி ரசம் பொதுவாக செய்ய எளிதானதுதான்.
தேவையான பொருட்கள்:
நாட்டுத் தக்காளி - 1/4 கிலோ
தண்ணிர் - 4 தம்ளர்
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீருடன் தக்காளியைப் போட்டுப் பிழிந்து கரைத்து வையுங்கள்.
மிளகு, சீரகத்துடன் பூண்டையும் போட்டு நன்றாக இடித்து வையுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலைப் போட்டுத் தாளியுங்கள்.
இதில் தக்காளி கரைசலை விட்டு கொதிக்க விடுங்கள்.
கொதி வந்ததும் இடித்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், பூண்டைப் போட்டு அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியை மூடி விடுங்கள்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு உப்பு சேர்த்து பயன்படுத்துங்கள்.